40 அடி வீணையை திறந்து வைத்தார் பிரதமர்

பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இன்று அவரது 93வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அயோத்தியாவில் சரயு நதிக்கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணை நிறுவப்பட்டுள்ளது. இந்த வீணை 40 அடி நீளமும், 14 டன் எடை கொண்டதாகும். இந்த வீணையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர்.
Tags :