மனைவி குளிப்பதை பார்த்த வாலிபரை கொலைசெய்த கணவன்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது கட்டளை குடியிருப்பு இந்த பகுதியைச் சார்ந்தவர் கோமுக்காரையாளர் இவரது மூன்றாவது மகன் ஐயப்பன் இவருக்கு திருமணம் ஆகி சுமதி என்கின்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி சுமதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில்வேவில் பணியாற்றி வருகின்றார் இந்த நிலையில் ஐயப்பன் மற்றும் அவரது தாயாருடன் கட்டளை குடியிருப்பில் வசித்து வருகிறார்.கூப்பிட்ட வேலைக்குச் செல்லும் ஐயப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு ஐயப்பன் வீட்டிற்கு செல்லாமல் எங்கேயோ போய்விட்டார் என கூறப்படுகிறது.இந்த நிலையில்20.03.2023 காலை கட்டளை குடியிருப்பில் உள்ள தனியார் குடை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இடுகாட்டிற்கு செல்லும் வழியில் நிர்வாணமான நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து புலியரை போலீசார் மற்றும் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட பொழுது சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை அடித்து கொலை செய்து நிர்வாண நிலையில் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. அவரது உடலில் பல பகுதிகளில் பலத்த காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த கொலைச் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.சம்பவ இடத்திற்கு தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த கொலை எதனால் நடந்தது யாரால் நடத்தப்பட்டது. என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.இது தொடர்பாக கட்டளைக்குடியிருப்பை சேர்ந்த பிரபு மற்றும் செண்பகராஜ் ஆகிய 2பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பிரபுவின் மனைவி குளிக்கும் போது அவரது வீட்டில் ஐயப்பன் எட்டிபார்த்ததாகவும் அதனால் மனவேதனையில் இருந்த பிரபு ஐயப்பனை தனது கூட்டாளியான செண்பகராஜிடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Tags :













.jpg)





