பழனி முருகன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.2.81 கோடி

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோயில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த நிலையில் உண்டியல் காணிக்கையில் ரூ. 2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 256 ரூபாயும், தங்கம் 5,005 கிராம், வெள்ளி 11,438 கிராம், 1,324 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags :