ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது நியாயமான எனது கோரிக்கை-டிடிவி தினகரன்

by Editor / 27-11-2022 02:59:25pm
 ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது நியாயமான எனது கோரிக்கை-டிடிவி தினகரன்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நோக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்க கூடிய நிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு,  சுயநினைவு தவறிய நிலையில் இருப்பது போன்ற மனிதரின் பேச்சிற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டாம் என்று நினைக்கிறேன். கட்சியின் லட்சியங்களையும், கொள்கையையும் பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என்ற அவர் ஏற்கனவே தனித்து போட்டியிட்டு உள்ளோம். எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்பது நியாயமான எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம்.

ஒரு நாட்டிற்கு இரண்டு பலமான கட்சிகள் இருந்தால் தான் ஜனநாயகத்திற்கு நல்லது. திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். அதிக கூட்டணி இருந்தாலும் மக்கள் ஆதரவு வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து பலம் இழந்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய ஒரு கூட்டணி இருந்தால் திமுகவை வீழ்த்த முடியும். நல்ல கூட்டணி தான் தலைமை யார் என்று தேர்தல் சமயத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எனக்கு யார் தலைமையில் கூட்டணி அமையும் என்று ஒரு அனுமானம் உள்ளது. அதன்படி செய்வோம்.என்று டிடிவி தினகரன் கூறினார்.

 

Tags :

Share via