கஞ்சா விற்பனை: தாய், மகன் கைது.. 11 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திய இருவர், சூளூர்பேட்டையில் இறங்கி புறநகர் மின்சார ரயிலில் கும்மிடிப்பூண்டி வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கலால் போலீசார், சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த இருவரை, போலீசார் சோதனையிட்டனர்.அவர்களிடம், 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மமுதா, அவரது மகன் சில்லு தலாய் என விசாரனையில்தெரிந்தது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :