எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை  குற்றவாளி புகைப்படம் வெளியீடு

by Editor / 24-06-2021 04:49:27pm
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை  குற்றவாளி புகைப்படம் வெளியீடு




சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதனமாக கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த கொள்ளையனின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் சென்சார் மீது கைவைத்து நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் வந்தது இதனை அடுத்துத் தனிப்படை அமைத்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க டெல்லி, ஹரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்களின் முக்கிய குற்றவாளியை அமீர் அர்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அந்த குற்றவாளியின் புகைப்படத்தை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருவதாகவும் விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

Tags :

Share via

More stories