ரயிலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; தடுக்க முயன்ற பயணிகள் மீது தாக்குதல்
லக்னோவில் இருந்து மும்பை வந்த புஸ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த கொடிய சம்பவம் நடந்திருக்கிறது. ரயில் நாசிக் அருகில் உள்ள இகத்புரி வந்தபோது ஆயுங்களுடன் 8 பேர் கொண்ட கும்பல் ரயிலில் ஏறி பயணிகளை மிரட்டிக் கொள்ளையடித்தனர்.
அந்தப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்த பெண் பயணியை கொள்ளையர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனைத் தடுக்க முயன்ற பயணிகளை கொள்ளையர்கள் கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர். இதில் 6 பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது ரயில் கசரா ஸ்டேஷன் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் உதவி கேட்டுக் கத்தினர்.
உடனே ரயில்வே போலீஸார் உள்ளே நுழைந்து இரண்டு கொள்ளையர்களை மட்டும் பிடித்தனர். மற்றவர்கள் ரயிலில் இருந்து இறங்கித் தப்பித்து ஓடிவிட்டனர்.பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி மேலும் 2 இரண்டு கொள்ளையர்களைக் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரிடமும் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பித்துச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் நடந்துள்ள இந்தக் கொள்ளை சம்பவம் ரயில் பயணிகளை மிகவும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஏற்கெனவே மஹாராஷ்டிராவின் கசரா மற்றும் நாசிக் இடையேயும், புனே-சோலாப்பூர் இடையேயும் அடிக்கடி ரயில் பயணிகளைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் தமிழத்தில் வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :