கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் நாலு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்- சட்டத்துறை அமைச்சர் சி. டி .ஆர் நிர்மல் குமார்

by Admin / 27-10-2026 11:39:50am
கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் நாலு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்- சட்டத்துறை அமைச்சர் சி. டி .ஆர் நிர்மல் குமார்

ஆண்டிபட்டி தேக்கம்பட்டி கிளை சிறையில் இருந்து 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் நாலு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்தப்பி ஓடிய 17 கைதிகளில் நாலு பேர் இதுவரை காவல் துறையால் பிடிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 13 கைதிகளை பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வனப்பகுதிகள் மற்றும் கேரளா பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும் சிறையில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து சிறைத்துறை டிஜிபி தலைமையில் விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும்  தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. டி .ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo