மிரட்டி பார்க்கும் வகையில் இந்த சோதனை - ஆர்.எஸ்.பாரதி

by Staff / 03-11-2023 01:39:33pm
மிரட்டி பார்க்கும் வகையில் இந்த சோதனை - ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி எ.வ.வேலு வீட்டிற்கு வந்துள்ளார். அவரை, காவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். இது குறித்து பேசிய அவர், வருமான வரித்துறை சோதனை எதிர்க்கட்சிகளை மிரட்டி பார்க்கும் வகையில் மத்திய அரசால் நடத்தப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டு எதிர்க்கட்சிகள் சோர்வடைந்து விடமாட்டார்கள், அது எங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo