வீட்டில் குளித்து கொண்டிருந்த போது கொடூர மரணம்

கேரளா: திருச்சூரை சேர்ந்த பைஜூ (49) என்ற நபர் வீட்டு குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுடன் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென குளியலறை சுவர் இடிந்து பைஜூ மீது விழுந்தது. இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது பைஜூவை தவிர வீட்டில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags :