கர்ப்பிணி மரணத்தில் திடீர் திருப்பம்

by Editor / 26-06-2025 03:58:32pm
கர்ப்பிணி மரணத்தில் திடீர் திருப்பம்

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணியான உமா தேவியின் (25) மரணத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேகனாஸ்ரீ என்ற பெண் குழந்தைக்கு தாயான கர்ப்பிணி உமாதேவியை பரிசோதித்த ஸ்கேன் மையம், தடையை மீறி கருவில் உள்ள குழந்தை பெண் என அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். இதுவே உமாதேவியை அவரது கணவர் குடும்பத்தார் தற்கொலைக்கு தூண்டியது காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்து, உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமனார் ஜெயவேலு, மாமியார் சிவகாமி கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via