86வது வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் முன்னாள் முதல்வர்...

by Admin / 19-08-2021 03:03:25pm
86வது வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் முன்னாள் முதல்வர்...

அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, நேற்று 10ம் வகுப்பு பொது தேர்வினை எழுதியுள்ளார்.

86 வயதான ஓம் பிரகாஷ், ஜேபிடி  பணிநியமனம் தொடர்பான ஊழல் வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு சிறை சென்றார். அந்த தருணத்தை பயன்படுத்தி அவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 2017ல் தேர்ச்சிப்பெற்றதாக தெரிகிறது

. அதைத்தொடர்ந்து அவர் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 10ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் தேர்ச்சிப்பெறவில்லை என கூறி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இந்தநிலையில் நேற்று அவர் 10ம் வகுப்பு ஆங்கிலம் பாடத்திட்டத்திற்கு தேர்வு எழுதியுள்ளார். முதிர் வயதில்  சிரமப்பட்டு கல்வி கற்பது குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சவுதாலா, தான் ஒரு மாணவன் என்றும், இதுபற்றி விமர்சிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo