“நான் இறந்துவிட்டேன்”.. பேஸ்புக்கில் கமெண்ட் போட்ட எம்எல்ஏ

by Staff / 16-06-2024 01:03:22pm
“நான் இறந்துவிட்டேன்”.. பேஸ்புக்கில் கமெண்ட் போட்ட எம்எல்ஏ

திருச்சி லால்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாக அமைச்சர் நேரு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், தான் இயற்கை எய்தி விட்டதாக கமெண்ட் செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்ததில், திமுக நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கவில்லை. இதனால், தான் இறந்துவிட்டதாக கமெண்ட் செய்ததாக கூறினார். பின்னர் அதனை அவர் நீக்கிவிட்டார்.

 

Tags :

Share via