மருது பாண்டிய சகோதரர்களை நினைவுப்படுத்தும் விதமாக மனோ கல்லூரியில்  ஜம்புத் தீவு பிரகடன நாள் -  கருத்தரங்கம்.

by Editor / 16-06-2024 10:31:29am
மருது பாண்டிய சகோதரர்களை நினைவுப்படுத்தும் விதமாக  மனோ கல்லூரியில்  ஜம்புத் தீவு பிரகடன நாள் -  கருத்தரங்கம்.

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 184 சார்பில் மருது பாண்டிய சகோதரர்களை நினைவுப்படுத்தும் விதமாக ஜம்புத் தீவு பிரகடன நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தின் தொடக்கமாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சு. பலவேசகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் ச. சுந்தரவடிவேல் அவர்கள் இக்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மருதபாண்டிய சகோதரர்களின் வாழ்கை வரலாறு மற்றும் நாட்டின் விடுதலைக்காக அவர்கள் செய்த தியாகத்தைப் பற்றியும் ஜம்பு தீவு பிரகடனத்தில் இடம்பெற்ற வாசகங்கள் பற்றியும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கின் இறுதியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பலவேசகிருஷ்ணன் நன்றியுரை கூறினார். இக்கருத்தரங்கத்தில் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் திரு. வீ. விஜய், செல்வி. வி. சிவகெனசல்யா மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மருது பாண்டிய சகோதரர்களை நினைவுப்படுத்தும் விதமாக  மனோ கல்லூரியில்  ஜம்புத் தீவு பிரகடன நாள் -  கருத்தரங்கம்.
 

Tags : மனோ கல்லூரியில்  ஜம்புத் தீவு பிரகடன நாள் -  கருத்தரங்கம்

Share via