சீமான் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

by Staff / 14-12-2023 12:26:43pm
சீமான் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

2018ஆம் ஆண்டு தமிழீழம் குறித்து சென்னை தரமணியில் நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சீமான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி எம். நிர்மல்குமார் விசாரணைக்கு இடைக்கால தடையும், நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories