பிரபல யூ டியூபர் டி.டி.எஃப் வாசனின் மோட்டார் வாகன உரிமம் ரத்து
பிரபல யூ டியூபர் டி.டி.எஃப் வாசனின் மோட்டார் வாகன உரிமை ரத்துசெய்யப்பட்டுள்ளது. விலை உயர்ந்த பைக்கில் அண்மையில் காஞ்சிபுரம்- பெங்களூர் நெடுஞ்சாலையில் பைக் சாகசம் செய்த பொழுது பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளான வாசனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது உயர் நீதிமன்ற நீதிபதி அவருடைய பைக்கை எரிக்க வேண்டும் என்றும் அவருடைய யூ டியூப் சேனலை மூட வேண்டும் என்றும் இளைஞர்களை தவறாக வழி நடத்தி அதன் மூலம் பிரபலம் அடைவதாக கூறியிருந்த நிலையில், இன்று அவருடைய ஓட்டுநர் உரிமம் பத்தாண்டுகளுக்கு [2033]காஞ்சிபுர வட்டாரப்போக்குவரத்து துறை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags :