ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துப்பேசினார்.

by Editor / 26-07-2023 04:38:16pm
ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துப்பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலவரம், திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்டக் கோப்புகளை ஆளுநரிடம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து விவரங்களை 'திமுக ஃபைல்ஸ் 2' என்ற பெயரில் ஜூலை இறுதிக்குள் வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநருடனானசந்திப்பின்போது பாஜக நிர்வாகிகள் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo