மராட்டிய வேளாண்துறை அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை

ஆவணங்களை சேதப்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநில வேளாண்துறை அமைச்சர் மாணிக்கராவ் கோகடேவுக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கராவ் கோகடே மீது 1995ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோகடேவின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
Tags :