நடந்ததை தான் சொல்லியிருக்கிறேன் - அண்ணாமலை

by Staff / 21-09-2023 03:19:15pm
நடந்ததை தான் சொல்லியிருக்கிறேன் - அண்ணாமலை

மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. சரித்திரத்தில் இருப்பதைதான் சொல்லியிருக்கிறேன். அண்ணாவை நான் தரக்குறைவாக பேசவில்லை, எத்தனையோ இடங்களில் அண்ணாவை உயர்த்தி பேசியிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo