பணமோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி நீக்கம்
விராலிமலை மேற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மை இனர் நலப்பிரிவுச் செயலாளர் ஜேசுராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது சத்துணவு, அங்கன்வாடிகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட ஜேசுராஜ் மீது விராலிமலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி என்பவர் புகார் அளித்திருந்தார்.
அது தொடர்பான செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து சேசுராஜை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜேகராஜ் (விராலிமலை மேற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்
Tags :