by Staff /
07-07-2023
12:42:56pm
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு இன்று, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் உள்ளிட்ட பலர் மலர் தூரி மரியாதை செலுத்தினர்.
Tags :
Share via