by Staff /
07-07-2023
12:32:58pm
கேரளாவின் மலப்புரம் முண்டுபுரம்பாவில் வாடகை வீட்டில் 4 பேர் வியாழக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சபீஷ் (37), அவரது மனைவி ஷீனா (35), மற்றும் அவர்களது குழந்தைகள் ஹரி கோவிந்த் (6), ஸ்ரீவர்தன் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தம்பதியர் தனித்தனி அறைகளில் இறந்து கிடந்தனர். ஹரி கோவிந்தின் உடல் தரையில் கிடந்த நிலையில், படுக்கையில் ஸ்ரீவர்தன் இறந்து கிடந்தார். சபீஷ் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். ஷீனா வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். நால்வரின் மரணம் குறித்து மலப்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via