அ.தி.மு.க தோ்தல் அறிக்கையை காப்பியடித்து தி.மு.க தோ்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை திமுக நகல் எடுத்து வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை மாவட்ட ராதாபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியவர், அதிமுக ஏற்கனவே அறிவித்த திட்டங்களை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்து உள்ளதாகவும் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை 12,000 ஆக உயர்த்தி வழங்குவதாக அதிமுக அறிவித்ததை திமுக தனது அறிக்கையில் அப்படியே சேர்த்து உள்ளதாகவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகையை 2000 ஆக உயர்த்துவதாக அறிவித்த பிறகு திமுகவும் அதேபோல உயர்த்தி அறிவித்துள்ளதாகவும் கடந்த தேர்தலில் 525 வாக்குறுதிகளில் கால்வாசியை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் கல்வி கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டர் மானியம் போன்ற கடந்த கால வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். திமுக அறிவித்துள்ள 8000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான கூப்பன் திட்டம் குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள்களை வாங்குவதற்காகவும் அதன் மூலம் கமிஷன் பெறுவதற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு மோசடி திட்டம் என்றும் அவர் குற்ற ச்சாட்டை முன் வைத்தார். இதற்கு பதிலளித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, அதிமுக தான் தங்களது பழைய திட்டங்களை காப்பியடித்து அறிக்கை தயாரித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags :

















