தெற்கு ரயில்வேயில் 80% பணியிடங்களில் வட இந்தியர்கள் - ராமதாஸ்

by Staff / 21-12-2022 01:03:00pm
தெற்கு ரயில்வேயில் 80% பணியிடங்களில் வட இந்தியர்கள் - ராமதாஸ்

தெற்கு ரயில்வேயின் பல்வேறு நிலையங்களில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களின் அமைப்பு சார்ந்த பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக மக்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும், என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo