ரஜினிகாந்த் சகோதரர் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்.

by Staff / 11-10-2025 09:29:48am
ரஜினிகாந்த் சகோதரர் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் கோயிலிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களும்,பல்வேறு மொழி திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் சமீப காலமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகின்றனர். 

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணன்அருணாச்சலேஸ்ரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை தரிசனம் செய்த அவர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார், தொடர்ந்து கோயில் சார்பாக அவருக்கு பிரசாதம் மற்றும் மாலை மரியாதை செய்யப்பட்டு அண்ணாமலையார் புகைப்படம் வழங்கப்பட்டது.

 

Tags : ரஜினிகாந்த் சகோதரர் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம்.

Share via