பாதுகாப்பு காரணமாக செல்பிஎடுத்த தொண்டரை எச்சரித்த காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்.

by Editor / 30-12-2021 03:03:21pm
பாதுகாப்பு காரணமாக செல்பிஎடுத்த தொண்டரை எச்சரித்த காங்கிரஸ் தலைவர் சிவக்குமார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார், மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனையடுத்து வெளியேறிய அவரிடம் செல்பி எடுக்க முயன்ற தொண்டர் ஒருவர் அவரது செல்போனை அவரது முகத்திற்கு முன்பாக நீட்டியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அவர் உடனடியாக அந்த தொண்டரின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தி, செல்பி எடுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். தொண்டரின் கைகளில் என்ன இருந்தது என்று தனக்குத்தெரியாது  எனவும் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு அவர் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியதால் தான் இந்த குழப்பம் உருவானதாகவும்,தெரிவித்த  அவர், ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும் என்றும், சில நேரங்களில் மனிதர்களின் கோபம் வெளிப்படுவதில் தவறு ஏதும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

Tags :

Share via
Logo