மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர்  ஆய்வு.

by Editor / 30-12-2024 03:58:34pm
மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர்  ஆய்வு.

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்த பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 1ம் தேதி மாலை 4:30 மணிக்கு அண்ணாமலையார் மலை மீது இருந்து சுமார் 40 டன் எடையுள்ள பாறை உண்டு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவினால் மலை மீது இருந்த இரண்டு வீடுகளுக்கு மேல் மண் சரிந்து விழுந்ததால் வீட்டிலிருந்த ஐந்து சிறுவர், சிறுமிகள் உட்பட ஏழு பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்டு ஏழு பேரின் உடல்களை மீட்டனர். மேலும் இதில் அதிக பாதிப்புடைய 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை தற்போது மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்தில் வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளது. 

தற்போது அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் அவர்களது குறைகளையும் கேட்டனர்.
 

 

Tags : மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர்  ஆய்வு.

Share via