தினசரி லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு ....உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

by Admin / 30-12-2021 02:52:18pm
   தினசரி லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு ....உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...


கொரோனா சுனாமியால் சுகாதார கட்டமைப்புகள் சரிவை நோக்கி செல்லும் என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிகமாக பரவக்கூடிய ஒமிக்ரான் வைரஸ் மற்றும் அதே நேரத்தில் புழக்கத்தில் உள்ள டெல்டா வைரஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவலைக்குரிய டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ்கள் இரட்டை அச்சுறுத்தல்கள் என குறிப்பிட்டுள்ளார்.
 
இது சோர்வுற்ற சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சரிவின் விளிம்பில் உள்ள சுகாதார அமைப்புகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என கவலை தெரிவித்துள்ள டெட்ரோஸ் அதானோம், உலகளவில் முந்தைய வாரத்தை காட்டிலும் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் பிரான்சில் தினசரி லட்சக்கணக்கில் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories