காதலியுடன் Amazon CEO-வுக்கு நிச்சயதார்த்தம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது காதலி லாரன் சான்செஸுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இருவரும் பிரான்சில் மோதிரம் மாற்றிக்கொண்டதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திருவிழாவிற்கு தனது காதலியுடன் ஜெஃப் பெசோஸ் கூட வந்திருந்தார். ஆனால் லாரனுக்கு ஏற்கனவே 2 திருமணங்களும் 3 குழந்தைகளும் உள்ளன. ஜெஃப் பெசோஸ்-க்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :