2000 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு

by Staff / 23-05-2023 12:31:23pm
2000 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. அப்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் என்ன செய்வது என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது. ரூ.1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெளிவுபடுத்தியுள்ளார். இதனிடையே, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

 

Tags :

Share via