"புதியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது” - கனிமொழி எம்பி
மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, "குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதியக் கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநில அரசுகள்தான் 50% நிதியை வழங்குகின்றன. மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறித்து வருகிறது” என விமர்சித்தார்.
Tags :