ராகுல் காந்தி மீண்டும் தெலங்கானாவில் சுற்றுப்பயணம்
தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தெலங்கானாவுக்கு வரவுள்ளார். அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ராகுல் 3 நாட்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர். தெலங்கானாவில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு தான் சாதகமாக உள்ளன.
Tags :