இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் பறிமுதல்.

தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக இலங்கை வடக்கு, கிழக்கு பிராந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது.இதைத் தொடா்ந்து, கடற்படையினா் தலைமன்னாா், நெடுந்தீவு முதல் புத்தளம் கடல் பகுதி, கடலோரப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்னா். இதில், புத்தளம் கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமாகச் சென்ற சரக்கு வாகனத்தை கடற்படையினா் நிறுத்தி சோதனையிட்டனா்.அப்போது, 40 மூட்டைகளில் 1, 236 கிலோ பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பீடி இலைகள், வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த கடற்படையினா் வாகனத்திலிருந்த இருவரைக் கைது செய்தனா்.இந்தப் பீடி இலைகள் தமிழகத்தில் மன்னாா் வளைகுடாக் கடல் பகுதியில் இருந்து படகு மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த இலங்கைப் படகில் மாற்றப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், வாகனம், கைதான இருவா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
Tags :