நத்தம் அருகே விஷ செடி விதைகளை தின்ற 7 குழந்தைகள் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மணக்காட்டூரைச் சேர்ந்த ஜீவா (வயது 7), சுரேந்திரன் (5), சந்தானக்குமார் (7), மணிமாறன் (5), சுப்புலெட்சுமி (12), வீரலெட்சுமி (5), கீர்த்திகா (7) ஆகிய 7 குழந்தைகள் தங்கள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தனர்.அப்போது அங்கிருந்த ஆதாளை எனப்படும் விஷ செடியின் விதைகளை தின்றனர். இதனால் அவர்களது உடல் நிலை பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கேட்டபோது விதைகளை தின்றதாக கூறினர். பின்னர் அவர்களை நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 7 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :