காங்கிரஸ் தலைவர் தேர்தல்- ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பு குறைவு.

by Staff / 21-09-2022 11:07:43am
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பு குறைவு.

காங்கிரஸ் கட்சியில் தற்போது இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி உள்ளார். எனினும் வலுவான எதிர்க்கட்சியை வழிநடத்தும் நோக்கிலும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பமுடைய வேட்பாளர்கள் வரும் செப்டம்பர் 24 -30ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. தற்போது, ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via