கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது.

by Staff / 03-09-2024 12:47:36pm
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பி. மேட்டுப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததால் போலீசார் அங்கு கஞ்சா விற்ற அதேபகுதி தீனதயாளன் (22, ) சிவரஞ்சன் (29), அலங்காநல்லுார் கலைவாணர் நகர் மணி கார்த்தியை(28), ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1. 300 கிலோ கஞ்சா, மற்றும் ரூ. 3500 பணத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via