மதகஜராஜா நகைச்சுவை படமாக இருப்பதால் படம் வசூலை அள்ளி கொண்டுள்ளது.

2012 ஜெமினி பிக்சர்ஸ் சார்பாக விஷால் , அஞ்சலி, வரலட்சுமி ,சரத்குமார், சந்தானம், சோனு சூட் மணிவண்ணன் ,சுப்புராஜ், நிதின் சத்யா ,சடகோபன் ரமேஷ் ,சைமன், ஜான் கோக்கன் ஆகியோரின் நடிப்பில் ஆஸ்திரேலியா ,பழனி, ஜெய்ப்பூ,ர் ஹைதராபாத் மற்றும் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் மத கஜ ராஜா இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க சுந்தர் சிஇயக்கியுள்ளார். ஏ.சி. சண்முகம், ஏசியஸ் அருண்குமார் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் படம் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது 2025 பொங்கலை முன்னிட்டு வெளியானது. அருண் விஜய் நடிப்பில் வந்த வணங்கால் மற்ற சின்ன படங்களோடு திரையிடப்பட்ட இப்படம் வந்த படங்களில் வசூலில் முன்னணியில் உள்ளது. இப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகமாக இருப்பதின் காரணமாக பொங்கல் விடுமுறையை கழிக்கும் முகமாக இளைஞர்களும் குடும்பங்களும் சென்று படத்தை பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படம் விஷாலுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது .சமீப காலங்களில் விஷாலின் உடல்நலம் குறித்த செய்திகள் சமூக ஊடங்களில் வேகமாக பரவி வந்து விசாரணை அறிவதற்கு தோன்றிய நிலையில் இப்படம் வெளிவந்தது .அவருக்கு பட வாய்ப்புகள் மேலும் கிடைப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
Tags :