ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மல்யுத்த வீராங்கனைகள்

by Staff / 21-04-2024 04:31:36pm
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மல்யுத்த வீராங்கனைகள்

கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் அசத்தினர். வினேஷ் போகட் (50 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ) மற்றும் ரித்திகா ஹூடா (76 கிலோ) ஆகியோர் அந்தந்த பிரிவுகளில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தனர். இதன் மூலம், இந்த போட்டியில் இந்தியா மூன்றாவது ஒலிம்பிக் இடங்களைப் பெற்றது.

 

Tags :

Share via