குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள RGB ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நந்தகுமார் (24), கோட்டையம் ராஜப்பன் என்பவரின் மகன் அகில் (28) மற்றும் ஆலப்புழா முரளி என்பவரின் மகன் ஆனந்த் (28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் குற்றாலத்தில் 35க்கும் மேற்பட்ட மசாஜ் செண்டர்கள் இயங்கிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பழையகுற்றாலம் பகுதியில் மசாஜ் மையத்தால் வடமாவட்டத்த்தை சேர்ந்த ஒருவர் 5 இலட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது