விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.

by Editor / 13-11-2023 10:20:10am
விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.


தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டங் களை சேர்ந்த ஆயிரக்கணக் கானோர்  தங்களது சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். மேலும் இன்றும் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏராளமான சுற்றுலா தளங்களுக்கு தங்களது குடும்பங்களுடன் பொழுது போக்குவதற்காக சுற்றுலாத்தலங்களை நோக்கி படையெடுத்துச் சென்ற வண்ணம் உள்ளனர், மேலும் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் குடும்பத்தோடு சென்ற வண்ணம் உள்ளனர் இதன் தொடர்ச்சியாக குற்றாலம் பேரருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் திரண்டு வந்து உற்சாகமாக குளித்து சென்ற வண்ணமுள்ள இதன் காரணமாக குற்றாலம் பேரறிவு பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த அலை மோதி வருகிறது. காலை முதலே குற்றாலம் பேரருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 

Tags : விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.

Share via

More stories