ஜே இ இ எனப்படும் பொறியியல் படிப்பிற்கான தேசிய தேர்வில் மாற்றம்

by Admin / 18-10-2024 12:56:12pm
 ஜே இ இ எனப்படும் பொறியியல் படிப்பிற்கான தேசிய தேர்வில் மாற்றம்

 2025 ஆம் ஆண்டு முதல் ஜே இ இ எனப்படும் பொறியியல் படிப்பிற்கான தேசிய தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 தேசிய அளவிலான பொறியியல் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு முதன்மைத் தாள் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வில் மொத்தம் 90 கேள்விகள் இருக்கும். பிரிவு -அ வின் ஒரு பாடத்திற்கு 20 பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்படும். பி- பிரிவில் 10 கேள்விகளும் இதில் ஐந்து கேள்விகள் கட்டாயமாக விடையளிக்கும் வினாவாக இருக்கும் என்றும் ஜே. இ .இ முதன்மைத் தாளில் ஒவ்வொரு சரியான விடைக்கும் நாலு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் மொத்தம் 300 மதிப்பெண் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.. மாணவ விண்ணப்பதாரர்கள் இது பற்றிய செயல்முறை விவரங்களை அறிய தேசிய தேர்வு முகமை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via