செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

by Staff / 19-11-2023 12:46:26pm
செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எம்.எல். ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

Tags :

Share via

More stories