ரூ.2. 73 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

by Editor / 23-04-2025 01:49:53pm
 ரூ.2. 73 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

கோவை மாவட்ட சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருகூர் புது காலனி மற்றும் காங்கேயம்பாளையம் செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.இந்த சோதனையில், வீடுகளில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 2, 73, 904/- மதிப்புள்ள 330 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (58), வில்லியம் தங்கராஜ் (43), மீரா ஹூசைன் (33) மற்றும் கோகுல்நாதன் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.முன்னதாக, மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 19 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 22 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

Tags :

Share via