202 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது
புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று இரவில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் புதுக்கடை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாராயபுரம் பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்த 202. 486 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் புகையிலை பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கிய திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மெகபூப் என்பவரின் மகன் முகமது ஷபீக் (37) பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்த ஜாண்ராஜ் என்பவரின் மகன் அரவிந்த் (28) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.
Tags :



















