ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வாலிபரிடம் செல்போன் பறிப்பு

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 36 வயது வாலிபர், சில நாட்களுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் பழகும் செயலியை பயன்படுத்தியுள்ளார். அதில் அறிமுகமான வாலிபரை தனிமையில் சந்திக்கலாம் என எண்ணி உடையாம்பாளையத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 3 பேர், அந்த வாலிபரை மிரட்டி செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட வாலிபர் சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது.
Tags :