ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

by Editor / 01-08-2025 02:00:47pm
ரயில் சேவைகளில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்படும் மற்றும் மாற்று வழிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 4, 6, 8, 10, 12, 15, 17, 19 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம், சேர்த்தலை ரயில் நிலையங்களில் நிற்காது. இதே ரயில், 27, 28, 29, 30  தேதிகளில் விருதுநகர், காரைக்கால், திருச்சி வழியாக இயக்கப்படும்.

 

Tags :

Share via

More stories