ஐந்தருவியில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வாகன ஓட்டிகள் வேதனை.விசிக கண்டனம்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் ஐந்தருவி,உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் சீசன் காலமாகும். இந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து லட்சக்கணக்கானோர் அருவிகளின் நீராட வந்து செல்லுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் பகுதியில் தனியாக வாகன கார் பார்க்கிங் மற்றும் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் தனி கார் பார்க்கிங்,சித்திர சபை பகுதியில் தனி கார் பார்க்கிங்,தேரடி திடலில் தனி கார்பார்க்கிங் என வரிசையாக கார் பார்க்கிங் அதிகமாக உள்ளன இதன் தொடர்ச்சியாக ஐந்து அறிவிப்பதிலும் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட கார் பார்க்கிங் உள்ளது. இந்த கார் பார்க்கிங் பகுதிகளில் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் பத்து ரூபாய் வசூல் செய்யலாம் என எனவும் அதேபோன்று ஆட்டோக்களுக்கும் ரூ. 20 வசூல் செய்யலாம் எனவும் குற்றாலம் பேரூராட்சி தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான அறிவிப்புகளை முறையாக வெளியிடாமல் வாகன நுழைவு பகுதியில் மட்டும் இருசக்கர வாகனங்களுக்கு பத்து ரூபாய் மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் என தனித்தனியாக கட்டணங்களில் எழுதி வைத்திருந்தனர் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கார் பார்க்கிங் கட்டணம் வாங்குவதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது இதன் தொடர்ச்சியாக குற்றாலம் வந்த அமைச்சர் ராமச்சந்திரனிடம் இது குறித்து செய்திகளை தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இதனை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார் இந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது ஆனால் ஐந்தருவி நுழைவுப் பகுதியில் கார் பார்க்கிங் ஏலம் எடுத்த நபர் இருசக்கர வாகனங்களுக்கும் ரூபாய் பத்து ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார் இதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகன ஓட்டிகள் இன்று காலை வரை கட்டணங்கள் செலுத்திய ஐந்தருவிப்பகுதிக்கு சென்றனர் இது குறித்து மாவட்ட ஆட்சியருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்ந்து அவர் குற்றாலம் பேரூராட்சிக்கு ஐந்தருவியில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் மாவட்ட ஆட்சிதலைவரிடம் கோரிக்கை மனுவும் அளித்துள்ளார்.Tags :