ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்

by Staff / 07-12-2022 12:30:47pm
ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்

மதுரையில் இன்று காலை 2 மணி நேரம் தாமதமாக ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு விநியோகம் செய்ய வேண்டிய பால் 7 மணிக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் இது குறித்து ஆவின் நிர்வாகம் தரப்பில் இருந்து கூறும் போது, ஒப்பந்த ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதால் பால் விநியோகத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக கூறியுள்ளனர்.

 

Tags :

Share via