ஆன்லைன் செயலி மூலம் 45 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி
மதுரை அருகே எஃப் க்யூ எல் என்ற ஆன்லைன் செயலி மூலம் 45 நாட்களில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து செய்துள்ளனர்.
மோசடி பேர்வழிகள் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 45 நாட்களில் இரட்டிப்பு தொகையாக ரூபாய் ஒரு லட்சம் தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளதோடு கூடுதலாக ஆட்களை சேர்த்தால் கிரிப்டோ கரன்சி கமிஷன் மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதாகவும் கூறி நெட்வொர்க் மார்க்கெட்டிங் வழியாக பொது மக்களை நம்ப வைத்து அவர்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர். தொடக்கத்தில் சிலருக்கு பணம் கொடுத்து நம்ப வைத்தவர்கள் பெரும் தொகை சேர்ந்தவுடன் ஆகஸ்ட் 26 அன்று நள்ளிரவில் செயலியை செயலிழக்க செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்த மக்கள் செய்தி முடக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்து மதுரை மாவட்ட மேலூர் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுப் வட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்த முகாம்களில் புகார் மனுக்களை எழுதி புகார் செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமாக இருந்த மோசடியில் தொடர்புடைய 12 இடைத்தரவுகளை திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்திற்கு பின்னணியில் இருந்து இயங்கிய குற்றவாளிகளான ரஞ்சித் அருண் ஆகியோரை போலீசார் லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பி தேடி வருகின்றனர். இது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்கள் அல்லது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம் என்றும் தேசிய சைபர் க்ரைம் ஹெல்ப் லைன் 19 30 முறையாகவோ அல்லது தேசிய சைபர் குற்றப்பதிவு வலைத்தளம் வழியாகவோ புகாரை பதிவு செய்யலாம் என்றும் பணத்தை மீட்டெடுத்து தருகிறோம் என்று எவரேனும் வந்து மீண்டும் பணம் கேட்டால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :



















