மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர் உதவி தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை -மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பாக முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். அரசு கட்டிடங்களில் இயங்கும் குழந்தை மையங்களில் 12 கோடி செலவில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என்றும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்காக செயற்கை நுண்ணறிவு கூறுகள் கொண்ட கல்வி சார் காணொளிகள் உருவாக்கப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர் உதவி தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்கல வாகனங்கள் வழங்கப்படும் என்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய 10 புதிய இல்லங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கூடுதலாக ரெண்டு சிறப்பு இல்லங்கள் தொடங்கப் படுவதாகவும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மனநலம் மற்றும் அறிவு சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்காக 1.5 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி மதிப்பீட்டில் 100 பேர் தங்கும் புதிய இல்லம் அமைக்கப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டாா்..
Tags :


















